கப்பல்களைப் பதிவு செய்தல்
- தற்காலிக / நிரந்தரப் பதிவுக்குத் தேவையான ஆவணங்கள்
- பதிவுசெய்தல் நடவடிக்கைமுறை
- விண்ணப்பிக்க வேண்டிய விதம்
- பெறக்கூடிய நன்மைகள்
- விசாரணைகள்
தற்காலிக / நிரந்தரப் பதிவுக்குத் தேவையான ஆவணங்கள்
- விற்பனைச் சீட்டு
- கொள்வனவு மற்றும் விற்பனைக் கம்பெனிகளின் பணிப்பாளர் சபைப் பிரேரணைகள் (இருப்பின்)
- வகுப்பினை உறுதிப்படுத்தல்
- அழித்தல் சான்றிதழ் / நிகழ்காலப் பதிவாளரின் இணக்கம்
- நிகழ்கால நியதிச்சட்ட சான்றிதழ்கள் (பிரதிகள்)
- பதிவு செய்யப்படுகின்ற வேளைகளில் ஏதேனும் கலம் கீழே குறிப்பிடப்பட்ட (IACS அங்கத்துவ சங்கங்கள்) வகைப்படுத்தல் சங்கமொன்றினால் வகைப்படுத்தப்பட்டிருக்காவிடின் அத்தகைய கலமொன்றைப் பதிவு செய்ய இயலாது.
பிரிவு | மின்னஞ்சல் | இணையதளம் (மேலதிக விபரங்களுக்கு) |
|||
American Bureau of Shipping (ABS) | abs-worldhq AT eagle DOT org | http://www.eagle.org | |||
Bureau Veristar (BV) | veristarinfo AT bureauveritas DOT com | http://www.veristar.com | |||
China Classification Society (CCS) | ccs AT ccs DOT org DOT cn | http://www.ccs.org.cn | |||
Det Norske Veritas (DNV) | iacs AT dnv DOT com | http://www.dnv.com | |||
Germanischer Lloyd (GL) | headoffice AT gl-group DOT com | http://www.gl-group.com | |||
Indian Register of Shipping (IRS) | ho AT irclass DOT org | http://www.irclass.org | |||
Korean Register of Shipping (KR) | krsiacs AT krs DOT co DOT kr | http://www.krs.co.kr | |||
Lloyds Register (LR) | Lloydsreg AT lr DOT org | http://www.lr.org | |||
Nippon Kaiji Kyokai (NK) | xad AT classnk DOT or DOT jp | http://www.classnk.or.jp | |||
Registro Italiano Navale(RINA) | info AT rina DOT org | http://www.rina.org | |||
Russian Maritime Register of Shipping (RS) | 004 AT rs-head DOT spb DOT ru | http://www.rs-head.spb.ru | |||
அல்லது இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு வகைப்படுத்தல் கம்பெனியொன்றினால் வகைப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
தற்காலிக பதிவு செய்தலுக்கு தேவையான ஆவணங்கள்,
- உரிமையை உறுதிப்படுத்துகின்ற நொத்தாரிசு பதிவேடு (விற்பனைத்துண்டு அல்லது கட்டுமாணம் செய்தவரின் சான்றிதழ்)
- விண்ணப்பதாரியிடம் வெளிநாட்டுக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட கலமொன்றே காணப்படுமாயின் சொத்துவத்தை மாற்றாமல் கலத்தை இலங்கைக் கொடியின் கீழ் மாற்றியமைக்கான தகுதிவாய்ந்த அதிகாரியினால் முறையாக சட்டமுறையானதாக்கியமைக்கான சொத்துவச் சான்று.
- செல்லுபடியற்றதாக்கும் சான்றிதழ் அல்லது நிகழ்காலப் பதிவின் இணக்கப்பாடு.
- கொள்வனவு மற்றும் விற்பனைக் கம்பெனிகளின் பணிப்பாளர் சபைப் பிரேரணைகள்.
- மேலே காட்டப்பட்ட வகைப்படுத்தல் சங்கமொன்றினால் விநியோகிக்கப்பட்ட வகுப்புச் சான்றிதழ் அல்லது கடற்பயணத்திற்குப் பொருத்தமானதென்பற்கான சான்றிதழ்.
கலங்கள் / உலாப்படகுகள் பதிவு செய்தல் தொடர்பான விசாரணைகள் மற்றும் விண்ணப்பப் பத்திரங்கள், கப்பல்கள் பதிவாளர், வணிகக் கப்பல் பிரிவு, கப்பற்றுறை அமைச்சு, 1 வது மாடி, 43-89, யோர்க் வீதி, கொழும்பு 01, இலங்கை எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
தொலைநகல். : +94-12-441429/435160 தொலைபேசி: +94-12-441429/435127
மின்னஞ்சல் : dmsmos AT sltnet DOT lk
இலங்கைக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியுள்ள கலங்கள் இலங்கைப் பிரசையான ஆளொருவரினாலோ கூட்டிணைக்கப்பட்ட சபையொன்றினாலோ (கடல்கடந்த கம்பெனியினால்) முழுமையாக சொத்துவம் வகிக்கப்படல் வேண்டும்.
கப்பல் உரிமையாளர்களுக்கான கையேட்டினை வாசிப்பதற்காக இங்கு சுடக்கவும் (கிளிக்)
- மிகவும் போட்டித் தன்மை கொண்ட கட்டணங்கள்.
- துரித பதிலிறுப்புக் காலம்.
- 24 மணித்தியாலங்களிலும் அணுகக்கூடிய தன்மை.
- இலாப வரியோ மூலதன ஈட்டல் வரியோ வேறு ஏதேனும் வரிகளோ இன்மை.
- பெலும்பாலான கரையோர நாடுகளில் மிகுந்த சாதகமான நிலைமைகள் நிலவுதல்.
- பிற மறைந்த செலவினங்கள் இன்மை.
கப்பல் பதிவுற்கான விண்ணப்பப் படிவங்களை தரவிறக்க இங்கே கிலிக் செய்யவும்
கப்பற்றுறைப் பதிவாளர்,
வணிகக் கப்பல் பிரிவு,
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு,
1 வது மாடி, பிரிஸ்டல் கட்டிடம்,
43 - 89, யோர்க் வீதி,
கொழும்பு 01.
இலங்கை.
தொலைபேசி | : +94-112-388376 / 435127, 441293/4 |
தொலைநகல் | : +94-112-435160 |
மின்னஞ்சல் | : dmsmos AT sltnet DOT lk |
விதிகளும் பிரமாணங்களும்
* ஆவணங்கள் ஆங்கிலத்தில் உள்ளது.
வணிகக் கப்பல்
- 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்கமுடைய வணிகக் கப்பல் சட்டம்
- 1988 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்கமுடைய வணிகக் கப்பல் (திருத்தச்) சட்டம்.
- வணிகக் கப்பல் (பயிற்றுவித்தல், சான்றிதழ் வழங்குதல் மற்றும் காவல் புரிதல்) ஒழுங்குவிதிகள்.
- வணிகக் கப்பல் (பணிக்கமர்த்தல் மற்றும் கடலோடிச்சேவை நிபந்தனைகள்) (1980 இன் இலக்கம் 99/6)
- வணிகக் கப்பல் (திருத்தம்) (கடலோடி பணிக்கமர்த்தல் மற்றும் சேவை நிபந்தனைகள்) பிரமாணங்கள் (1990 இன் இலக்கம் 612/25)
- வணிகக் கப்பல் (கடலோடிகள் சேவை நிலைமைகளும் வேதனங்களும்) பிரமாணங்கள் (1974 இன் இலக்கம் 133/9)
- வணிகக் கப்பல் (கடல்சேவை பயிலுநர்) பிரமானங்கள் (1975 இன் இலக்கம் 183/7)
- வணிகக் கப்பல் (இடர் நிலையுற்ற கடலோடிகள்) பிரமாணங்கள் (1975)
- வணிகக் கப்பல் (திருத்தம்) (இளம் ஆட்களை சேவைக்கெடுத்தல்) பிரமாணங்கள் (1980 இன் இலக்கம் 97/5)
- வணிகக் கப்பல் (மூன்றாவது உதவியாளர் சான்றிதழ் பரீட்சை) பிரமாணங்கள் (1971 இன் இலக்கம் 218/3)
- வணிகக் கப்பல் (பரீட்சைகள்) பிரமாணங்கள் (1976 இன் இலக்கம் 243/3)
- வணிகக் கப்பல் (வெளிநாட்டுப் பங்குரிமையாளர்களைக் கொண்ட இலங்கைக் கம்பெனிகளுக்குரிய இலங்கைக் கப்பல்களைப் பதிவுசெய்தல் (1983 இன் இலக்கம் 257/5)
- வணிகக் கப்பல் (உத்தியோகபூர்வ சம்பவக் குறிப்பீடு) பிரமாணங்கள் (1975 இன் இலக்கம் 167/5)
- வணிகக் கப்பல் (திருத்தம்) (கட்டணங்கள்) பிரமாணங்கள் - 1471/11 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்.
கப்பல் துறை முகவராண்மைச் சட்டம்
- 1972 இன் 10 ஆம் இலக்கமுடைய கப்பற்றுறை முகவர்களுக்கு உரிமை வழங்கல் சட்டம்
- 1981 இன் 09 ஆம் இலக்கமுடைய கப்பற்றுறை முகவர்களுக்கு உரிமை வழங்கல் (திருத்தச்) சட்டம்
- 1982 இன் 16 ஆம் இலக்கமுடைய கப்பற்றுறை முகவர்களுக்கு உரிமை வழங்கல் (திருத்தச்) சட்டம்
- கப்பற்றுறை முகவர்கள் (உரிமம் வழங்கல்) ஒழுங்குவிதிகள் (684/9 - 1991)
- கப்பற்றுறை முகவர்கள் (திருத்தம்) (உரிமம் வழங்கல்) ஒழுங்குவிதிகள் (1992)
- கப்பற்றுறை முகவர்கள் (உரிமம் வழங்கல்) ஒழுங்குவிதிகள் (763/8 - 1993)
- கப்பற்றுறை முகவர்கள் (உரிமம் வழங்கல்) ஒழுங்குவிதிகள் (905/13 - 1996)
- செலாவணிக் கட்டுப்பாடுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (கப்பற் துறை முகவர்கள், கப்பற்றுறைப் போக்குவரத்து மற்றும் கரையோர கப்பல்கள்) (இலக்கம் 721/4 – 1992)
- கப்பற்றுறை முகவர்கள் - செலாவணிக் கட்டுப்பாடு காப்புவரி – 1996
- 2002 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்கமுடைய கப்பற்றுறை முகவர்களுக்கு உரிமம் வழங்குதல் (திருத்தச்) சட்டம்
- கப்பற்றுறை முகவர்கள் ஒழுங்குவிதியின் (திருத்தம் - உரிமம் வழங்குதல்)(கட்டணங்கள்)
கப்பற்றுறை சட்ட மேலாட்சி
கடல்சார் மாசுபாட்டினைத் தடுத்தல்
- 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கமுடைய கடல்சார் மாசுபாட்டினைத் தடுப்பதற்கான சட்டம்.
கடல்சார் கப்பற்பயணத்தின் பாதுகாப்பு (கடற்கொள்ளை)
- கடல்சார் கப்பற் பயணத்தின் பாதுகாப்பு (கடற்கொள்ளை).
- 2000 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்கமுடைய கடல்சார் கப்பற் பயணத்தின் பாதுகாப்புக்கு எதிரான சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டம்
- 2001 ஆம் அண்டின் 9 ஆம் இலக்கமுடைய கடற்கொள்ளைச் சட்டம்
கடல் மார்க்கமான பண்டப் போக்குவரத்து
- 1982 இன் 21 ஆம் இலக்கமுடைய கடல் மார்க்க பண்டப் போக்குவத்துச் சட்டம்
- ஹேர்க் விஸ்பி விதிகள் / ரொட்டர்டம் விதிகள்
துறைமுகத் தரக் கட்டுப்பாடு
- துறைமுகங்களின் தரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை முறை.
- IMO இன் கீழ் துறைமுகத்தின் தரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை முறைகளை ஒப்புநோக்குதல்.
- இந்து சமுத்திர புரிந்துணர்வு உடன்படிக்கை
இணையத்தளம்: www.iomou.org.